ஊத்துக்கோட்டை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி
ADDED :2623 days ago
ஊத்துக்கோட்டை:விநாயகர் கோவில்களில் நடந்த சங்கடஹர சதுர்த்தி விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட வையால், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல், ஆனந்தவல்லி உடனுறை திருநீலகண்டேஸ்வரர் கோவில், தொம்பரம்பேடு மகா கால பைரவர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான விநாயகர் சன்னதிகளில், சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.