மானாமதுரை மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED :2620 days ago
மானாமதுரை: மானாமதுரை மறவர் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விரதமிருந்து பக்தர்கள் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடத்தி மாலையில் முளைப்பாரி பொட்டலில் பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் முளைப்பாரிகளை முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்காரகுளத்தில் கரைத்தனர். இரவு கோயில் முன் அன்னதானம்,கலைநிகழ்ச்சி நடைபெற்றன.