உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவியூர் செல்லாயி அம்மன் கோயில் ஆடித் திருவிழா

ஆவியூர் செல்லாயி அம்மன் கோயில் ஆடித் திருவிழா

காரியாபட்டி:காரியாபட்டி ஆவியூரில் செல்லாயி அம்மன் கோயில் 7 நாள் நடந்த ஆடித் திருவிழாவில் பூக்குழி இறங்கி, அம்மனுக்கு பால் குடம் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மேலத் தெரு, கீழத் தெரு பங்காளிகள் சார்பாக ஆண்கள், பெண்கள் கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டத்துடன் கண்மாயில் முளைப்பாரி கரைத்தனர். ஐந்தாயிரம் பேர் கூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !