சீரமைக்கப்படுமா சிவன் கோயில் எதிர்பார்ப்பில் மேலூர் பக்தர்கள்
மேலுார், மேலுாரில் புரதானமிக்க சிவன் கோயிலை சீரமைக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கு 150 ஆண்டுகள் பழமையான கல்யாண சுந்தரேஸ்வரர்காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் 18 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அறநிலையத்துறையினர் முறையாக பராமரிக்காததால்கட்டடம் வலுவிழந்து வருகிறது. கோயிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் கூறியதாவது : கோயிலைபுதுப்பிக்க பக்தர்கள் தயாராக உள்ளனர். அறநிலையத்துறையிடம்அனுமதி கோரி ஓராண்டிற்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. மழை பெய்தால் கருவறை சுவாமி சிலை மீது நீர் விழுகிறது. உள்புறங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. ராஜகோபுரத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது, என்றார். நிர்வாக அலுவலர் பாலசரவணன் கூறியதாவது: கோயிலை பழமைமாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி திட்ட மதிப்பீடுதயாரித்துள்ளனர். அனுமதி பெற்று கோயில் சீரமைக்கப்படும், என்றார்.