சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விழா
ADDED :2989 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், தயிர், பன்னீர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.