ஆடிப்பூர கல்யாணம் இன்று விழா துவக்கம்
ADDED :2623 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், திரிபுர சுந்தரி சமேதவேகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர திருக்கல்யாணப் பெருவிழா இன்று துவங்குகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழாவை அடுத்து, ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, இன்று இரவு, விநாயகர் உற்சவம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்குகிறது. நாளை காலை, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும், 10ல், திரிபுர சுந்தரி அம்மன் உற்சவமும், 14ல், திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான 14ம் தேதி திரிபுர சுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண கோலத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் விமரிசையாக நடைபெறுகிறது.