உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிமாரியம்மன் கரக உற்சவ விழா

கன்னிமாரியம்மன் கரக உற்சவ விழா

குன்னுார்: குன்னுார் அருகே வெலிங்டன் பஜார் பகுதியில் உள்ள கன்னிமாரியம்மன் கோவிலில், 22வது ஆண்டு கரக உற்சவ விழா விமரிசையாக நடந்தது.
கோவிலில், கடந்த, 20ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அபிஷேக ஆராதனை, கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நாள்தோறும் நடந்தது. கரக உற்சவ நாளில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.தொடர்ந்து முருகனடி கங்கை பகுதியில் இருந்து அம்மன் திருக்கரக ஊர்வலம் துவங்கி கோவிலை அடைந்தது. பின்னர் பூமாலை, கும்ப பூஜை, குழந்தைகளுக்கு பட்டாடை வழங்கல் ஆகியவை நடந்தன. மாலையில் மாவிளக்கு பூஜை, கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து திருக்கரக புறப்பாடுடன் நடந்த ஊர்வலம் கங்கையில் நிறைவு பெற்றது. அம்மனுக்கு மஞ்சள் நீராடல், அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, ஆரத்தி ஆகியவற்றுடன் விழாநிறைவு பெற்றது.ஏற்பாடுகளை டாக்டர் அம்பேத்கார் நகர் கன்டோன்மென்ட் லைன் ஊர் பொதுமக்கள் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !