முத்துமாரியம்மன் கோவிலில் கரகம் எடுக்கும் விழா
ADDED :2623 days ago
இளையான்குடி: சாலைக்கிராமம் அருகே உள்ள தெற்கு வலசைக்காடு கிராமத்தில், உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், கரகம் எடுக்கும் விழா நடைபெற்றது. விழாவில், கண்ணாயி அம்மன் குளத்தில் இருந்து கரகம் புறப்பட்டு, முக்கிய வீதி வழியாக அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது.