செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடக்கம்
ADDED :2623 days ago
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா, நேற்று தொடங்கியது. அதை முன்னிட்டு, வரும், 8ல், கம்பம் நடுதல், 14ல், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், சத்தாபரணம் நடக்கிறது. ஆக., 15ல், அக்னி கரகம், பூங்கரகம், கூழ் படைத்தல்; 16ல், பொங்கல் வைத்தல், வண்டிவேடிக்கை, கம்பம் எடுத்து கங்கையில் சேர்த்தல்; 17ல், பூந்தேரில் அம்மன் வீதியுலா, மஞ்சள் நீராட்டுதல், வசந்த விழாவுடன் நிறைவடையும். இன்று முதல், வரும், 17 வரை, தினமும் இரவு, அம்மன் விதவித அலங்காரங்களில், வீதியுலா நடக்கவுள்ளது.