திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு பக்தர்கள் பரவசம்
திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் நேற்று ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமியம்மன் கோயில், மலையடிவாரம் பத்திர காளியம்மன், பெரியகடை விதி பாதாள காளியம்மன், கவடக்காரத்தெரு காளியம்மன் கோயில், ஆர்.எம்., காலனி அம்மன் கோயில், முருகபவனம் பத்திரகாளியம்மன் கோயில், திருச்சி ரோடு தீப்பாச்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், பன்னாரி அம்மன் உட்பட பல கோயில்களில் ஆடிப் பெருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கூழ் காய்ச்சி பிரசாதம் வழங்கப்பட்டது. கோட்டைக் குளத்தில் பெண்கள் பூஜை செய்து, மங்கள பாக்கியம் பெற புதுத்தாலி கட்டிக் கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்: விருப்பாட்சி தலையூற்று பகுதியில் பொதுமக்கள், புதுமணத்தம்பதிகள் குளித்து, புத்தாடை அணிந்து, கோயில்களில் வழிபட்டு சென்றனர். ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில், அபிேஷகங்களுடன் மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில், தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேடசந்துார்: வேடசந்துார் நாகம்மாள் கோயிலில், கணபதி ஹோமம், தீபாராதனை, அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்சிகளுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ரெங்கமலை மல்லீஸ்வரன் கோயில், புங்கம்பாடி காவேரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் திருமஞ்சன அபிேஷகத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சின்னாளபட்டி; சின்னாளபட்டி பாலநாகம்மன் கோயிலில், கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், திருவிளக்கு பூஜை, வளைகாப்பு விழா நடந்தது. சிறப்பு ேஹாமத்துடன், ஆடிப்பெருக்கு ஆராதனை நடந்தது. அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், அம்பாத்துரை வீரபக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி பை-பாஸ் ரோடு சந்தனக்கருப்பணசுவாமி கோயிலில் அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.