ஒரத்தி அம்மச்சார் அம்மன் கோவில் தீ மிதி திருவிழா
ADDED :2736 days ago
ஒரத்தி: அம்மச்சார் அம்மன் திருக்கோவில் தீ மிதி திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஒரத்தியில் எழுந்தருளியுள்ள அம்மச்சார் அம்மன் கோவிலில், ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி, கடந்த புதன்கிழமையன்று பக்தர்களுக்கு காப்பு கட்டும் வைபவம் நடந்தது. ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நேற்று, அம்மனுக்கு பூங்கரகம் வர்ணித்தல் நிகழ்வும், தீமிதியும் நடைபெற்றது. பகலில் அம்மன் மலர் அலங்காரத்துடன், மாட வீதியுலா நடைபெற்றது.