உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்., ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவில்., ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரவிழா கொடியேற்றத்துடன் நேற்று முதல் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு  கோயில் மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள் சுற்றி கோயிலுக்கு கொடிபட்டம் கொண்டு வரப்பட்டது. கொடிமரத்தின் முன் சிறப்பு பூஜைகள் செய்து, காலை 10:08 மணிக்கு  பாலாஜி பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு  பூஜைகள் நடந்தது. விழாவில் மணவாளமாமுனி மட சடகோபராமனுஜர் ஜீயர், சந்திரபிரபா எம்.எல்.ஏ., தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் நாகராஜன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.  இரவு 10:00 மணிக்கு  16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருவீதியுலா நடந்தது. விழா நாட்களில்  ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடக்கிறது.  ஆக.9 காலை 10:00 மணிக்கு  ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவையும், ஆக.11 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன்கோயிலில் ரெங்கமன்னார் சயனதிருக்கோல உற்சவமும், ஆக.13 7:20 மணிக்கு ஆண்டாள் தேரோட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !