உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிக பிரபலமான முருகன் கோவில்களில் ஒன்றாக திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் சித்திரை, மாசி, கார்த்திகை, ஆடிக்கிருத்திகை விஷேசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழா நேற்று நடந்தது. விழா ஒட்டி நேற்று முன் தினம் மாலை, மூலவ ருக்கு, மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அர்ச்சனை மற்றும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மொட்டை அடித்து, அலகு குத்தி, காவடி எடுத்தனர். திருமுருகன் திருக்கூட்டத்தாரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. குடிநீர், சுகாதாரம், சிறப்பு பேருந்து வசதிகள், பாதுகாப்பு என அந்தந்த அரசு துறையினர் மூலம் செய்யப்பட்டிருந்தன. கடந்த மூன்று தினங்கள் நடந்த கிருத்திகை விழாவில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கந்தனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !