ஆடி கிருத்திகை விழா பழநியில் கோலாகலம்
ADDED :2621 days ago
பழநி: பழநியில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, பெங்களூரைச் சேர்ந்த பக்தர்கள், மலர் காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி கோவில் நடை, அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த பக்தர்கள், மலர்க் காவடிகள் எடுத்து வழிபட்டனர். சென்னை பக்தர்கள், அலகு குத்தி வந்தனர். வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் பால் குடங்கள், தீர்த்தக்காவடி எடுத்தும், படிப் பாதையில் படி பூஜை செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். வின்ச் ஸ்டேஷனில், இரண்டு மணி நேரமும், பொது தரிசன வழியில், மூன்று மணி நேரமும், பக்தர்கள் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு, தங்க ரதப் புறப்பாட்டை காண, ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.