சூராடிமங்கலம் கருமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :2623 days ago
திருக்கழுக்குன்றம்:சூராடிமங்கலத்தில், விளக்கு பூஜை நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம், சூராடிமங்கலம் கிராமத்தில் உள்ள, கருமாரியம்மன் கோவிலில், மழை வேண்டியும், கிராம நன்மைக்காவும், ஹிந்து அன்னையர் முன்னணியினர் சார்பில், நேற்று முன்தினம் இரவு, விளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட பொது செயலர் பாலசுப்ரமணியன், ஒன்றிய தலைவர் ஆறுமுகம் பங்கேற்று, 108 திருமந்திரம் சொல்ல, பெண்கள் குங்கும அர்ச்சனை செய்தனர்.