தூத்துக்குடி பனிமயமாதா ஆலய ஆண்டு விழா
துாத்துக்குடி:துாத்துக்குடி பனிமய மாதா ஆலய 436ஆம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனவர்களால் ஏழு கடல்துறை அடைக்கலத்தாய் என அழைக்கப்படும் மாதா பேராலயத் திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு முதல் திருப்பலியும், 5:30மணிக்கு 2ம் திருப்பலியும், 7:30 மணிக்கு மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது.இதைத்தொடர்ந்து பகல்மதியம் 12:00 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது. நேற்று இரவு 7:00மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. ஏற்பாடுகளை பாதிரியார் லெரின் டிரோஸ் தலைமையில் உதவி பாதிரியார் விவேக் மற்றும் பணிக்குழுவினர் செய்திருந்தனர்.துாத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தின் பெருவிழாவில் திருவுருவ பவனி நடந்தது.