உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை சதுரகிரியில் பாதுகாப்பு

ஆடி அமாவாசை சதுரகிரியில் பாதுகாப்பு

விருதுநகர்: சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை திருவிழாவை யொட்டி, அடிவாரப் பகுதியை, கேமரா மூலம் கண்காணிக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
சதுரகிரி மலையில், ஆக., 9 முதல், 11 வரை, ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. இதற்காக, 8 முதல், 14ம் தேதி வரை, மலைப் பாதை திறக்கப்பட உள்ளது. இம்மலை, மதுரை மாவட்டத்திலும், அடிவாரம், விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட போலீசார் செய்து வருகின்றனர். அடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல், திருட்டு, சண்டை, சச்சரவுகள் என, பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதனால், இந்த ஆண்டு, விருதுநகர் மாவட்ட போலீசார், அடிவார பகுதி முழுவதையும், கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். முக்கியமாக, பொதுமக்கள் கூடும் இடங்கள், வண்டிப் பண்ணை, மகாராஜபுரம் பிரிவு, தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள், வாகன காப்பகங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !