உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை கோயில் கொடியேற்றம்

திருவாடானை கோயில் கொடியேற்றம்

திருவாடானை: திருவாடானை கோயிலில் ஆடிப்பூரத்திருவிழாவைமுன்னிட்டு கொடியேற்ற விழா நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா நேற்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.சிநேகவல்லிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டார்களுக்கு மரியாதை செலுத்தும்நிகழ்ச்சியும் தீபாராதனைகளும் நடந்தன. தேவஸ்தான செயல்அலுவலர்சந்திரசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக.14ல் அம்பாள் தவசும், மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும். விழா நாட்களில் சிநேகவல்லிஅம்மன் கேடகம், பல்லக்கு, காமதேனு, அன்னம், வெள்ளி ரிஷப சேவை, கமலம், குதிரை போன்ற பல வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !