திருத்தணி முருகனுக்கு ஏழுமலையான் சீர்வரிசை
ADDED :2665 days ago
திருப்பதி: திருத்தணி கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில், நேற்று சீர்வரிசை வழங்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுப்பிரமணியசுவாமிக்கு, மாமன் முறை எனக் கூறப்படும் ஏழுமலையான், ஆடி கிருத்திகையின் போது நடக்கும் உற்சவத்திற்கு, சீர்வரிசை வழங்குவது வழக்கம்.அதன்படி, நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், திருத்தணி கோவில் அதிகாரிகளிடம் பட்டு வஸ்திரம் உள்ளிட்ட சீர்வரிசையை அளித்தார்.