உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

ஊத்துக்கோட்டை முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

ஊத்துக்கோட்டை: ஆடி கிருத்திகை விழாவையொட்டி, ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், ஆந்திர மாநிலம், தாசுகுப்பம், புதுக்குப்பம், சுருட்டப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விடியற்காலை முதல், திருத்தணி மற்றும் ஆந்திர மாநிலம், ராமகிரி முருகப் பெருமான் கோவில்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் சென்றனர். ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள நாகவல்லியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள கால பைரவர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப் பெருமானுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !