புனித இன்னாசியார் ஆலய தேர்பவனி
ADDED :2665 days ago
விருதுநகர்: விருதுநகர் புனித இன்னாசியார் ஆலயத்தின் 74 வது ஆண்டு பெருவிழா ஜூலை 27 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் நவநாள் திருப்பலியும், மறையும் நடந்தது. முக்கிய நிகழ்வான தேர்பவனி விழா, நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. ஸ்ரீவில்லிப்புத்துார் இருதய ஆலய பாதிரியார் அல்வாரஸ் சொபாஸ்டின் துவக்கி வைத்தார். மிக்கேல் அதிதுாதர், புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை, புனித இன்னாசியார் திருஉருவங்கள் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் தேர்பவனி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 8:30 மணிக்கு விருதுநகர் மறைவட்ட அதிபர் ஆலய பாதிரியார் பென்டிக்ட் அப்புரோஸ்ராஜ், துணைபாதிரியார் அகஸ்டின் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது. மாலை நன்றி திருப்பலியும், நிற்கருனை பவனியுடன் திருவிழா நிறைவடைந்தது.