உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 81 ஆடுகள் 801 சேவல்கள் அம்மனுக்கு படையல்: ஆண்கள் பங்கேற்ற வழிபாடு

81 ஆடுகள் 801 சேவல்கள் அம்மனுக்கு படையல்: ஆண்கள் பங்கேற்ற வழிபாடு

மேலுார், மேலுார் அருகே வீர சூடாமணிபட்டி ஐந்து முழி அழகி அம்மன் கோயில் திருவிழாவில் மழை வேண்டி 81 ஆடுகள், 801 சேவல்களை வெட்டி படையலிட்டு ஆண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 30 முதல் காப்பு கட்டி பக்தர்கள் விரதமிருந்தனர்.

கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஐயாயிரம் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் 81 ஆடுகள், 801 சேவல்களை காணிக்கையாகசெலுத்தினர். காணிக்கையாக செலுத்திய ஆடுகள், சேவல்களை பெரியகண்மாயில் வெட்டி ரத்தத்தை தண்ணீரில் கரைத்தனர்.இதனால் மழை பெய்து கண்மாய் நிரம்பும் என்பது ஐதீகம். தொடர்ந்து படையலிட்டு தரிசனம் செய்தனர். பூஜாரி வீரணன் கூறியதாவது: காணிக்கையாக வந்த ஆடு, சேவல்களைமண்பானையில் போட்டு அதன் மீது வேப்பம் இலைகளையிட்டு அவிப்போம். அவித்த கறியை படையிலிட்டு வழிபடுவோம். மத ஒற்றுமையை பேண பெரியகண்மாய் அருகில்உள்ள சர்க்கரை மாற்று பாறை இஸ்லாமியர்கள் சர்க்கரைவழங்குவர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !