தென்பசியாரில் ஆடி திருவிழா: மிளகாய் பொடி அபிஷேகம்
ADDED :2664 days ago
மயிலம்: தென்பசியார் முருகன் கோவில் ஆடி திருவிழாவில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது. மயிலம் அருகே உள்ள தென்பசியார் பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. காலை 8:00 மணிக்கு பக்தர்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், 108 பால்குட ஊர்வலம் மற்றும் பக்தர்கள் அலகுகள் குத்திக்கொண்டு கார், ஆட்டோ, டிராக்டர்களை இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை தென்றல் இளைஞர் மன்றம் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.