பழநி முருகன் கோயில் ரோப்காரில் பொருத்த புதுப்பெட்டிகள்
ADDED :2664 days ago
பழநி: பழநி முருகன்கோயில் ‘ரோப்காரில்’ பொருத்துவதற்கு கரூரில் இருந்து புதிதாக பெட்டிகள் வந்துள்ளன. தமிழகத்திலுள்ள மலைக்கோயில்களில் பழநி முருகன் கோயிலில் மட்டும் தான் ‘ரோப்கார்’ இயக்கப்படுகிறது. இது மாதத்தில் ஒருநாளும், ஆண்டு பராமரிப்புக்காக ஒருமாதம் வரையும் நிறுத்துவது வழக்கம். இவ்வாண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 12 முதல் ‘ரோப்கார்’ நிறுத்தப்பட்டு கம்பிவடம், உருளைகள், பெட்டிகள் கழற்றும் பணி நடக்கிறது. இதில் புதிதாக கொல்கத்தாவில் இருந்து கம்பிவடம் வந்துள்ளது. தற்போது கரூரில் வடிவமைக்கப்பட்ட புதிய பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் கொல்கத்தாவில் இருந்து புதிய ‘சாப்ட்’ வந்தவுடன், புதிய கம்பிவடம் மற்றும் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளது, என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.