உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு : பொன்.மாணிக்கவேல் அதிரடி

பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு : பொன்.மாணிக்கவேல் அதிரடி

சென்னை: திருவள்ளூரில் இருந்து காரம்பாக்கத்திற்கு, காரில் கடத்தி வரப்பட்ட, பஞ்சலோக அம்மன் சிலையை மீட்ட போலீசார், ஐந்து பேரை பிடித்து, விசாரித்து வருகின்றனர். திருவள்ளூரில் இருந்து ஒரு கும்பல், நானோ காரில், பஞ்சலோக அம்மன் சிலையை கடத்துவதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலுக்கு, தகவல் கிடைத்துள்ளது.

நானோ காரின் எண் விபரமும் கிடைத்தது.இதையடுத்து, ஐ.ஜி., தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய போலீசார், மூன்று ஆட்டோக்களில் சென்று, அந்தக் காரை, போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் மடக்கினர். அப்போது, காரில் இருந்து ஓடிய ஐந்து பேரை, போலீசார் மடக்கிப் பிடித்தனர்.பின், காரை சோதனையிட்டதில், தாலி கொடி அணிவிக்கப்பட்ட நிலையில், 20 கிலோ எடையுள்ள, பஞ்சலோக அம்மன் சிலை இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த, கோபிநாத் உள்ளிட்ட ஐந்து பேர், அந்த சிலையை திருடி, 50 லட்சம் ரூபாய்க்கு விற்க இருந்தது தெரிய வந்தது.அம்மன் சிலையையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்து, ஐந்து பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிலை கடத்தல் ஆசாமி களை பிடிக்க உதவிய, ஆட்டோ டிரைவர்கள் மூன்று பேருக்கு, போலீசார் தலா, 1,500 ரூபாய் வெகுமதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !