ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா
ADDED :2664 days ago
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா நடந்தது.நேற்று முன்தினம், மாலை 6:00 மணி முதல் இரவு 3:00 மணிவரை, பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டது. ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து தாரை, தப்பட்டை, வாண வேடிக்கை முழங்க சந்தனக் குடத்தை தர்ஹா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேர் கொண்டு வரப்பட்டது.தீப்பந்தம், கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்ஹாவை மூன்று முறை வலம் வந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர். ஆக., 12ல் கொடியிறக்கம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.