உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருநாதசுவாமி கோவில் திருவிழா: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

குருநாதசுவாமி கோவில் திருவிழா: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

ஈரோடு: அந்தியூர் குருநாதசுவாமி கோவில் திருவிழா குறித்த முன்னேற்பாட்டு கூட்டம், பவானி தாலுகா, பூனாச்சி பஞ்சாயத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது: கோவில் விழாவில், வரும், ? முதல், 11 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. குறிப்பாக, குதிரை சந்தை, கால்நடை வளர்ப்போர் மூலம், கால்நடை சந்தை மற்றும் கண்காட்சியும் நடக்க உள்ளது. இதையொட்டி நடமாடும் கால்நடை மருந்தகம், இடவசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி, 40க்கும் மேற்பட்ட கால்நடை டாக்டர்களை நியமித்து, மருத்துவ முகாம் நடத்த வேண்டும். போதிய தற்காலிக கழிப்பிடம், தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், அறநிலைய துறையினர் உட்பட பிற துறையினர் இணைந்து, முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டும். முன்னேற்பாடு பணிகளை, நாளை (இன்று) இரவுக்குள் முடித்து, மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர வேண்டும். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப, போலீசாரை ஏற்பாடு செய்து, பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். எஸ்.பி., சக்தி கணேசன், பவானி டி.எஸ்.பி., சார்லஸ், கால்நடை துறை இணை இயக்குனர் மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !