உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் முத்துமாரியம்மன் பூப்பல்லக்கில் வலம்

விருதுநகர் முத்துமாரியம்மன் பூப்பல்லக்கில் வலம்

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்றிரவு 7:00 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் நகர் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருந்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.காலை 9:00 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று மாலை 6:00 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் மாரியப்பன், செயலாளர் சுப்பையா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !