உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனிமயமாதா சர்ச் திருவிழா தேர்பவனி

பனிமயமாதா சர்ச் திருவிழா தேர்பவனி

உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி புனித பனிமய மாதா சர்ச் திருவிழா தேர் பவனி நடந்தது. பாதிரியார் ஜோசப் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராயப்பன்பட்டியில் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான புனித பனிமயமாதா சர்ச் உள்ளது. தென் மாவட்டங்களில் நுாறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது. இங்கு கோபுரத்தில் உள்ள மணி கிறிஸ்துமஸ், முக்கிய திருவிழா காலங்களில் மட்டுமே ஒலிக்கும். இந்தாண்டு கடந்த 10 நாட்களாக நடந்த திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. நேற்று முன்தினம் அன்னையின் அலங்காரத் திருத்தேர் பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சர்ச்சில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த அன்னை மீண்டும் சர்ச்சை சேர்ந்தார். அன்னையின் அருள் வேண்டி ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வழிபட்டனர். நேற்று சர்ச்சில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !