உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் வரும் 11ல் துவக்கம்

குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் வரும் 11ல் துவக்கம்

உடுமலை: உடுமலை, ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூரம் விழா ஆக., 11ம் தேதி துவங்குகிறது.உடுமலை அடுத்த, குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த ஆண்டாளுக்கு, ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

அதன்படி, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், வரும் 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஆடிப்பூர நிகழ்ச்சி துவங்குகிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு லட்சார்ச்சனையும், 12ம் தேதியன்று நித்ய ஆராதனமும் நடக்கிறது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, 13ம் தேதி ஆடிப்பூரத்தன்று காலை, 8:30 மணிக்கு, அபிேஷகங்கள், நித்ய ஆராதனத்தை தொடர்ந்து, காலை, 9:00 - 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதன்பின், ஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருவீதி உலாவும் நடக்கிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !