உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியனுார் மாரியம்மன் கோவில் திருவிழா

கன்னியனுார் மாரியம்மன் கோவில் திருவிழா

வானுார்: கழுப்­பெ­ரும்­பாக்­கம் அருகே கன்­னி­ய­னுார் மாரி­யம்­மன் கோவி­லில், 6ம் ஆண்டு திரு­வி­ழா­வில் பக்­தர்­கள் கலந்­து­கொண்டு சாமி தரி­ச­னம் செய்­த­னர். வானுார் வட்­டம், பெரிய கொழு­வாரி சமத்­து­வ­பு­ரம் அருகே உள்ள ஸ்ரீ கன்­னி­ய­னுார் மாரி­யம்­மன் கோவில் ஆறாம் ஆண்டு ஆடி­மாத உற்­ச­வத்தை முன்­னிட்டு நேற்று காலை 9.30 மணிக்கு கோவில் வளா­கத்­தில் அம்­ம­னுக்கு சிறப்பு மஹா யாகம் நடை­பெற்­றது.

கன்­னி­ய­னுார் மாரி­யம்­ம­னுக்கு அலங்­கா­ரம் செய்து தீபா­ரா­தனை நடந்­தது. பக்­தர்­க­ளுக்கு அம்­மன் சிறப்பு அலங்­கா­ரத்­தில் அருள்­பா­லித்­தார். இதில் ஏரா­ள­மான பொது­மக்­கள் கலந்­து­கொண்டு சாமி தரி­ச­னம் செய்­த­னர். விழா­வில், வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்­க­ர­பாணி, அ.தி.மு.க., ஒன்­றிய செய­லா­ளர் சதீஷ்­கு­மார், கோவில் அறக்­கட்­டளை நிர்­வாகி சீனு­வா­சன் மற்­றும் சுற்­று­வட்­டார கிராம மக்­கள் விழா­வில் கலந்­து­ கொண்டு சாமி தரி­ச­னம் செய்­த­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !