சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
ADDED :2663 days ago
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 14 ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.