உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி மணக்குள விநாயகர் பிரம்மோற்சவ விழா: 16ல் துவக்கம்

புதுச்சேரி மணக்குள விநாயகர் பிரம்மோற்சவ விழா: 16ல் துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், 60ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும் 16ம் தேதி துவங்குகிறது. மணக்குள விநாயகர் கோவிலில் 60ம் ஆண்டு ஆடி பிரம்மோற்சவ விழா வரும் 16ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 17ம் தேதி முதல் வரும், 8ம் தேதி வரை தினமும் சிம்ம வாகனம், நாக வாகனம்,வெள்ளி பல்லக்கு, முத்துப்பல்லக்கு, கடல் தீர்த்தவாரி, திருக்கல்யாண உற்சவம், இந்திர விமானம், விடையாற்றி உற்சவம், திருமுறை உற்சவம், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பல உற்சவங்கள்நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. வரும் 1ம் தேதி பிரம்மோற்சவ ஊஞ்சல் உற்சவத்தில் தெய்வ தரிசனம் புகழ் மாணவி வாகீச கலாநிதி, கலைமாமணி தேச மங்கையர்கரசி அவர்களின் வினை தீர்க்கும் விநாயகர் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !