உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணியாளர்கள் பசி தீர்த்த கோவில் அன்னதானம்

பணியாளர்கள் பசி தீர்த்த கோவில் அன்னதானம்

ஈரோடு: ஈரோட்டில், டீக்கடை, ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால், இங்கு தங்கி பணிபுரிந்து வரும் வெளியூர்காரர்கள், கோவில்களில் நடந்த அன்னதானத்தில் பசி தீர்த்தனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி, தமிழக அரசு நேற்று ஒரு நாள் அரசு விடுமுறையை அறிவித்தது. இதனால் ஈரோட்டில், 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோட்டில் தங்கியுள்ள வெளியூர் தொழிலாளர்களுக்கு, காலை உணவு கிடைக்கவில்லை. இதையடுத்து, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், கொங்காலம்மன் கோவில்களில் நடந்த அன்னதானத்தில், அவர்கள் உணவு அருந்தினர். இது குறித்து, கோவில் பணியாளர்கள் கூறியதாவது: வழக்கத்தை விட, அதிகமானோர் உண்ணும் வகையில், உணவு தயாரிக்க வேண்டும். அன்னதானம் சாப்பிட வருபவர்களை, திருப்பி அனுப்பக் கூடாது என, வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மதியம், கோவிலுக்கு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !