பொன்னியம்மன் கோவிலில் பெண்கள் பால்குட ஊர்வலம்
ADDED :2663 days ago
திண்டிவனம்: திருவள்ளுவர் நகர் பொன்னியம்மன் கோவிலில், 108 பால் குட ஊர்வலம் நடந்தது. திண்டிவனம் திருவள்ளுவர் நகரில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆடி திங்களை முன்னிட்டு, 108 பால் குட அபிஷேக ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, பால்குட ஊர்வலம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர். தொடர்ந்து பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பொன்னியம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.