இரும்பை கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2737 days ago
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: இரும்பை மாகாளேஸ்வரர், கிளியனுார் அகஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. புதுச்சேரி அடுத்த இரும்பை கிராமத்தில் பிரசித்திப்பெற்ற மதுசுந்தர நாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில், கிளியனுார் அகஸ்தீஸ்வரர், ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, மாலை 4.30 முதல் 6.00 மணி வரை நந்திபெருமான் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.