உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கூடல்மலை நவநீதப்பெருமாள் எழுந்தருளல்

திருக்கூடல்மலை நவநீதப்பெருமாள் எழுந்தருளல்

மானாமதுரை, திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதப்பெருமாள் கோயில் 99 ம் ஆண்டு ஆடி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மலையில் இருந்து பல்வேறு ஊர்களில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் நேற்று முன்தினம் இரவு மானாமதுரை வேளார்தெருவில் உள்ள முருகன் கோயிலுக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும்,தீபஆராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து வீதிவுலா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !