உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி கோயிலில் தரிசனம் செய்ய கெடுபிடி

இருக்கன்குடி கோயிலில் தரிசனம் செய்ய கெடுபிடி

சாத்துார், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய போதுமான வசதிகள் இல்லலை. சிலரது கெடுபிடியால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அவதிக்கு ஆளாகின்றனர். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஆடி மாதம் பக்தர்கள் வருகை கணிசமாக இருக்கும், தற்போது ஆடி மாதம் என்பதால் பாதயாத்திரையாகவும், வேன், லாரி, காரில் குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சிறப்பு தரிசனம், பொது தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். தரிசனம் செய்து வெளியில் வர மூன்று மணி நேரம் ஆகிறது. நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். தரிசன வரிசையில் தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. சிறப்பு தரிசனத்திற்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் தேங்காய் உடைக்க பூஜாரிகள் 30 ரூபாய் தட்சணையாக வசூலிக்கின்றனர். கருவறையின் அருகில் தீபாராதனை காட்ட ஒருவர், விபூதி வழங்க ஒருவர், குங்குமம் வழங்க ஒருவர் என 3 முதல் 5க்கு மேற்பட்ட பூஜாரிகள் நின்று கொள்கின்றனர். பாதுகாப்பு பணி பெண் காவலர், கோயில் காவலர் என இருவர் வேறு கருவறையின் அருகில் நின்று கொள்கின்றனர். வரிசையில் கால்கடுக்க காத்திருந்து வரும் பக்தர்கள் பூஜாரிகள், கோயில் காவலர்கள் குறுக்கீடால் சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !