திருத்தணி ஆடி கிருத்திகை ரயில் ரூ.16 லட்சம் வருவாய்
ADDED :2629 days ago
திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில், 3ம் தேதி முதல், 7ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா நடந்தது. பக்தர்கள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம், சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து, திருத்தணி ரயில் நிலையத்திற்கு, 3ம் தேதி முதல், ஐந்து நாட்களுக்கு சிறப்பு மின்சார ரயில்களை இயக்கியது. இதுகுறித்து, திருத்தணி ரயில் நிலையமேலாளர் ரகு கூறியதாவது: முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவிற்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம், 5 நாட்களில், 88 ஆயிரத்து 790 பயணியர், சிறப்பு ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதனால், 16.19 லட்சம் ரூபாய், பயண கட்டணமாக வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.