உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொரப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

சொரப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

கண்டமங்கலம்: சொரப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. கண்டமங்கலம் ஒன்றியம், சொரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியலா நடந்து வந்தது. 9ம் தேதி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.நேற்று முக்கிய நிகழ்வாக பகல் 12:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து, அலகு குத்தி கார், வேன், ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சொரப்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !