ஏழைக்கு இரங்குங்கள்
கணவர்களே... உங்கள் மனைவியைக் காதலியுங்கள். மாறாக அவர்களுக்கு கசப்பாயிராதீர்கள். ஏழை மீது இரக்கம் வைப்பவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான். உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு. உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே. துன்மார்க்கன் கடன் வாங்குகிறான். அதை திருப்பிக் கொடுப்ப தில்லை. ஆனால் நீதிமானோ கருணை காட்டிக் கொடுக்கிறான். உன்னுடைய கண் உன் உடலில் தீபமாயிருக்கிறது. உன் கண் ஒருமைப்பாடுடன் இயல்பானதாக இருந்தால் உன் உடல் முழுவதும் பிரகாசமுள்ளதாயிருக்கும். கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும். நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்து சமயத்தில் உதவவே சகோதரன் பிறந்தான். வாயடக்கமாயிரு. உதடுகளை அதிகம் திறக்காதே. உதடுகளுக்குத் தூரமாயிரு. தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான். நீ உத்தமனாக இருக்க விரும்பினால் உனக்குள்ளவைகளை விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு.
–பைபிள் பொன்மொழிகள்