உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை விமரிசை

திரவுபதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை, திரவுபதி அம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று, திருவிளக்கு பூஜை மற்றும் அம்மன் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடை பெற்றது. காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டையில் பழமையான திரவுபதி அம்மன்  கோவில் அமைந்துள்ளது. ஆடி மாதம் என்பதால் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று, மாலை, 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து, அம்மன் ஊஞ்சல் சேவை சிறப்பாக நடந்தது. இரவு, அம்மன் சிறப்பு மலர்  அலங்காரத்தில் வீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரவுபதி அம்மன் இறைப்பணி அறக்கட்டளை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !