உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வக்ரகாளியம்மனுக்கு வளைகாப்பு விழா

வக்ரகாளியம்மனுக்கு வளைகாப்பு விழா

சென்னை:தாம்பரம், கடப்பேரி, ஜி.எஸ்.டி., சாலையில் அமைந்துள்ளது, வக்ரகாளியம்மன் கோவில். இந்த கோவில், 15ம் தேதி, நாகபஞ்சமி, கருடபஞ்சமியை முன்னிட்டு, ஆடிப்பூரம் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற உள்ளது. அன்று மாலை, 4:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள திரயம்பர கணபதிக்கு அபிஷேகம், விக்னஷே்வர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 6:00 மணிக்கு, தேவி கட்கமாலா சகஸ்ரநாமமும், 7:30 மணிக்கு, தேவதாபலியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, மங்கல ஆரத்தி, மகா தீபாராதனை, மகாபிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, கணேசன் குருக்கள் செய்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !