உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் திருவிளக்கு வழிபாடு

உடுமலை கோவில்களில் திருவிளக்கு வழிபாடு

உடுமலை: உடுமலை, நேருவீதி காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிவெள்ளியையொட்டி, திருவிளக்கு வழிபாடு நடந்தது. உடுமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையொட்டி, சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதையொட்டி, காமாட்சியம்மன் கோவிலில், மாலையில், பெண்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.காமாட்சி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையுடன் தீபாராதனை நடந்தது. பெண்கள், திருவிளக்கேற்றி, மலர் துாவி, மஞ்சள், குங்குமமிட்டு, அம்மன் பாடல்களை பாடியும் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !