உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலுக்காணத்தம்மன் கோவில் 53ம் ஆண்டு தீமிதி திருவிழா

துலுக்காணத்தம்மன் கோவில் 53ம் ஆண்டு தீமிதி திருவிழா

சென்னை: அம்பத்துார், துலுக்காணத்தம்மன் கோவிலில், 53ம் ஆண்டு தீ மிதி திருவிழா இன்று நடைபெற உள்ளது.அம்பத்துார், வெங்கடாபுரம், ஐந்து ஆலமரத்தடியில், ஸ்ரீ தேவி தண்டு மாரி  துலுக்காணத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின், 53ம் ஆண்டு தீ மிதி திருவிழா, இன்று மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை, 4:20 மணிக்கு, கணபதி  ஹோமம் நடந்தது.தொடர்ந்து, புற்றுக்கு சென்று சக்தி இறக்கி வருதல், தாய் கூரை எடுத்து வருதல், அம்மனுக்கு அபிஷேகம், கங்கணம் தரித்தல், கரகம் திருவீதி புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள்  நடந்தன.நேற்று காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகமும், 8:30 மணிக்கு, கரகம் திருவீதி புறப்படுதலும் நடந்தது. மதியம், அன்னதானம் நடந்தது.

இன்று காலை, 6:30 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம், 7:00 மணிக்கு, பசு பூஜை, 8:00 மணிக்கு, பூங்கரகம் எடுத்தல், 11:00 மணிக்கு கூழ் வார்த்தல், மதியம், 1:30 மணிக்கு, அலகு நிறுத்துதல்  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ சிவசித்திரு ஸ்ரீவாசன் சுவாமியின் வர்ணனை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, தீ மிதி திருவிழா நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு, அம்மன்  சிம்ம வாகனத்தில், திருவீதி புறப்படுதல் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, கோவில் அருகில், அம்மனுக்கு, மஞ்சள் நீராட்டு வைபவம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !