உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு லட்சம் தாமரையால் ராஜஸ்ரீ மகாலட்சுமி யாகம்

ஒரு லட்சம் தாமரையால் ராஜஸ்ரீ மகாலட்சுமி யாகம்

வேலூர்: ஒரு லட்சம் தாமரை மலர்களால், ராஜஸ்ரீ மகாலட்சுமி யாகம் நடக்கிறது. இதுகுறித்து, வேலூர் தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும், 24ல்  வேலூர் தங்கக்கோவில், 11வது ஆண்டு விழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று கணபதி ?ஹாமம் நடந்தது. தொடர்ந்து, ஒரு லட்சம் தாமரை மலர்களால், ராஜஸ்ரீ மகா லட்சுமி யாகத்தை சக்தி  அம்மா துவக்கி வைத்தார். வரும், 24ல் வரை யாகம் நடக்கிறது. இதில், பங்கேற்றால் மன அமைதி, குழந்தை பாக்கியம், தொழில் அபிவிருத்தி, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும். 200 ஆண்டுகளுக்கு  முன், அரசர்கள் காலத்தில் நடத்தப்பட்ட இந்த யாகம், இப்போது தங்கக்கோவிலில் நடக்கிறது. வரும், 24ம் யாகம் நிறைவு, தங்கக் கோவில், 11வது ஆண்டு விழா நடக்கிறது. இதற்காக, அன்று மாலை,  3:00 மணிக்கு, நாராயணி பள்ளியில் இருந்து, தங்கக் கோவில் வரை, கலச ஊர்வலம் நடக்கிறது. இதில், 5,000 பேர் பங்கேற்று, சொர்ண லட்சுமிக்கு அபி?ஷகம் செய்கின்றனர். இவ்வாறு, அவர்  கூறினார். பேட்டியின் போது, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !