பிரம்மகுண்டத்தில் ஆவணி தேரோட்டம்
ADDED :2723 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளே பிரம்மகுண்டத்தில் ஆவணி தேர் திருவிழா நடந்தது. பிரம்மகுண்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. இரவு நேரங்களில் பாரதம், அம்மன் சொற்பொழிவு, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அம்னுக்கு ஊரணிப்பொங்கல் வைத்து, தீ மிதி நிகழ்ச்சி நடந்தது. நேற்று தேர் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் வைத்து பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர்.