இருதய ஆண்டவர் ஆலய கொடியிறக்கம்
ADDED :2604 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் சர்ச் விழா ஆக.10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருதய ஆண்டவர் தேர்பவனி விழா நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் கடைசி நாளான நேற்று பாதிரியார்கள் பாஸ்கர் டேவிட், இருதயராஜ் ஆகியோர் திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றி கொடியிறக்கம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் நடைபெற்றது.