உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெரிந்து கொள்வோமா!

தெரிந்து கொள்வோமா!

●   இரவு 9:00 மணி –  அதிகாலை 4:00 மணி வரை நதிகளில் குளிப்பது கூடாது. சூரிய, சந்திர கிரகண காலத்திற்கு இந்த விதி பொருந்தாது.
●   அமாவாசையன்று  வெளியிடங்களில் சாப்பிடக் கூடாது. அன்று வீட்டில் அன்னதானம் செய்வது சிறப்பு.
●   கோயில், வீட்டு பூஜையறையில் மட்டுமே காயத்ரி மந்திரம் ஜபிக்க வேண்டும்.
●   தீபாராதனையின் போது  சுவாமியின்  முழு உருவத்துக்கு மூன்று முறை தீபம் காண்பிக்க வேண்டும்.
●   பெண்கள் வீட்டில் கோலமிடாமலும், விளக்கு ஏற்றாமலும் கோயிலுக்கு செல்ல கூடாது.
●   எரியும் விளக்கில் எண்ணெய்யைக் கையால் தொடுவதும், அதை தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
●   சிவன் –  வில்வம், விஷ்ணு – துளசி, விநாயகர் – அருகம்புல், பிரம்மா – அத்தி இலை ஏற்றது. இதை மற்றவருக்கு  வைக்கக்கூடாது.
●   பெண்கள் வேல், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய கூடாது.
●   கோயில்களில் சூடம், தீபத்தை கைகளில் ஏற்றி சுவாமிக்கு காட்டக்கூடாது.
●   நைவேத்யமாக படைத்த தேங்காயை சமையலில் சேர்த்து மீண்டும் அதை சுவாமிக்கு படைக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !