அங்கம் வெட்டின வரலாறு
ADDED :2602 days ago
வாள் வித்தையில் வல்ல வேற்றுநாட்டு முதியவன் தன் இளம் மனைவியுடன் மதுரையில் வந்து குடியேறினான். இளைஞர் பலர் அவரிடம் வாட்போர் பயின்றனர். அவருள் ஒருவனான சித்தன் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனானான். ஆசிரியருக்கு எதிராக அவனும் ஒரு சிலம்பக் கூடம் அமைத்தான். அத்துடன் குருபத்தினி மீது இச்சைக் கொண்டு அவளைக் கெடுக்க முயன்றான். கற்புக் கரசியான அப்பதிவிரதை சோமசுந்தரக் கடவுளை தஞ்சமடைந்தாள்.
இறைவனும் ஆசிரியரின் உருவம் தாங்கி வந்து சித்தனை வாட்போருக்கு அழைத்தான். நகருக்கு வெளியே இருவருக்கும் கடுமையான வாட்போர் நடந்தது. இறுதியில் ஆசிரியர் வேடந்தாங்கிய இறைவன் சித்தனின் நாக்கு, கண், கை என்ற ஒவ்வொரு அங்கமாகத் தன் வாளால் வெட்டி அந்நீசனைக் கொன்று கற்பரசியைக் காத்தருளினார். இறைவனின் இத்திருவிளையாடலை அறிந்த முதிய ஆசிரியர் பக்திப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.